உலக நாயகனுடன் கூட்டணி சேரும் வைகை புயல்!? எந்த படத்தில் தெரியுமா?

 

உலக நாயகனுடன் கூட்டணி சேரும் வைகை புயல்!?  எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் கமல் ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல் ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது.

kamal

இதையடுத்து கமல் ஹாசன் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்க உள்ளார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தைக்  கமல் ஹாசனே  இயக்கி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

vadivelu

ஏற்கனவே கமல் ஹாசனுடன் தேவர் மகன், சிங்கார வேலன்  உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.