உலக சுகாதார மையம் அளித்த திடுக்கிடும் தகவல்; சிகரெட் பழக்கத்தை விரைவாக கைவிட வேண்டிய நேரம்?!..

 

உலக சுகாதார மையம் அளித்த திடுக்கிடும் தகவல்; சிகரெட் பழக்கத்தை விரைவாக கைவிட வேண்டிய நேரம்?!..

சிகரெட் பழக்கத்தை கைவிட எலுமிச்சை, வெண்ணிலா அல்லது பெப்பர்மிண்ட் ஆகியவற்றை முகர்ந்து பார்த்தல் நலம்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு, வாசனை மிகுந்தவற்றை முகர்ந்து பார்ப்பது சிகரெட் பழக்கத்தை கைவிட உதவும் என்கிறது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 18 முதல் 55 வயது வரை சிகரெட் பழக்கம் உள்ள 232 நபர்களை தேர்வு செய்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

dfdsf

இந்த ஆய்வுக்கு உட்படுவதற்கு 8 மணி நேரம் முன்புவரை அவர்கள் யாருக்கும் சிகரெட் பிடிக்க அனுமதியில்லை. அவர்களிடம் சாக்லேட், ஆப்பிள், வெண்ணிலா, லெமன் (எலுமிச்சை) மற்றும் பெப்பர்மிண்ட் ஆகிய வாசனைகளில் எது பிடிக்கும் என கணக்கெடுத்திருக்கிறார்கள். அதிகமானவர்கள் பரிந்துரை செய்த வாசனையை வைத்து இந்த ஆய்வை தொடங்கியுள்ளனர்.

vxzv

அதன்பிறகு பற்ற வைத்த சிகரெட்டை கையில் கொடுத்து, புகைக்கின்ற ஆசை தோன்றும் போதெல்லாம் அவர்கள் தேர்ந்தெடுத்த வாசனையை முகர்ந்து பார்க்க செய்ததாக இந்த ஆய்வின் தலைவர் மைக்கேல் சேயட் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் சிகரெட் புகைப்பவர்களின் ஆர்வம் கணிசமாக குறைவதை கண்டறிந்திருக்கின்றனர்.

நிரந்தரமாக சிகரெட் புகைக்கும் பழக்கத்தை கைவிட முடியும் என்ற உத்தரவாதம் கிடையாது. சிகரெட் புகைக்கும் ஆசை வரும்போது இதுபோன்று பிடித்த வாசனையை முகர்ந்து பார்ப்பதால் சிகரெட் பழக்கம் குறையும். இதையே தொடர்ந்து செய்வதன் மூலம் சிகரெட் பழக்கத்தை கைவிடலாம்.

bxcbcb

உலக சுகாதார மையம் அளித்துள்ள தகவலின்படி, ஒரு ஆண்டுக்கு 40 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், 2030-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1 கோடியாக உயரும் என உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது.