உலக கோப்பை வென்ற  இங்கிலாந்து அணிக்கு இத்தனை கோடி பரிசுத்தொகையா?

 

உலக கோப்பை வென்ற  இங்கிலாந்து அணிக்கு இத்தனை கோடி பரிசுத்தொகையா?

1975ம் ஆண்டிலிருந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆடி வரும் இங்கிலாந்து, இதுவரை ஒருமுறை கூட  உலக கோப்பையை வென்றதில்லை.

1975ம் ஆண்டிலிருந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆடி வரும் இங்கிலாந்து, இதுவரை ஒருமுறை கூட  உலக கோப்பையை வென்றதில்லை. கிரிக்கெட்டின் தாயகமாக இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட்டில் சாதிக்காததால், மற்ற நாடுகள் இங்கிலாந்தை ஏளனமாக விமர்சித்து வந்தது.  ராசியில்லாத அணி என்ற பெயரையும் எடுத்தது. தற்போது நடந்து முடிந்த உலக கோப்பையில் இங்கிலாந்து  வென்றாலும், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற முறையிலே வெற்றி பெற்றுள்ளது.

திறமை ஒரு பக்கம் இருந்தாலும்  அதிஷ்ட காற்று  இங்கிலாந்து பக்கம் வீசியதாலே வெல்ல முடிந்து. மற்ற எல்லா அணிகளை காட்டிலும் இந்தியா பலமிக்க அணியாக இருந்த போதிலும் அரையிறுதியில் அதிஷ்டம் இல்லாததால் தோல்வியடைந்துவிட்டது. நியூசிலாந்து உடனானா விறுவிறு ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு வெற்றிவாகை சூடி கொடுத்துள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 27 கோடியே 42 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாகயும், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கு 13 கோடியே 71 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.