உலக கோப்பை அரையிறுதியில் இலங்கைக்கு வாய்ப்பில்லை…

 

உலக கோப்பை அரையிறுதியில் இலங்கைக்கு வாய்ப்பில்லை…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து, நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ஒரு பட்டியலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த அணிகள் எத்தனை ஆட்டங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து, நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ஒரு பட்டியலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

brendon mccullum

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கோப்பையை கைப்பற்றும் அணி எது என பலரும் கணித்து ஆரூடம் சொல்லி வருகிறார்கள். அதன்படி, மெக்கல்லம் ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து அணி 9 லீக் ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெறும் என்றும், ஆஸ்திரேலியாவிடம் மட்டும் இங்கிலாந்து அணி தோற்கும் என்று ஆரூடம் சொல்லி உள்ளார். அதே சமயத்தில் இந்திய அணியும் 8 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறிக்கும், ஆஸ்திரேலியாவையும் வெல்லும். ஆனால் இந்திய அணி இங்கிலாந்திடம் மட்டும் தோல்வியை தழுவும் என்று கணித்திருக்கிறார்.

insta

கிரிக்கெட் ஜாம்பவான்கள் உலக கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிற அணியை கணித்து சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், மெக்கல்லம் லீக் ஆட்டங்களிலும் எந்த அணி முன்னிலை வகிக்கும் என்று கணித்திருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறத்து.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை 6-ல் வெற்றியை வசப்படுத்தும். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, பாகிஸ்தான் அணிகளிடம் ‘சரண்’ அடையும் என்று குறிப்பிட்டுள்ள பிரன்டன் மெக்கல்லம், அரையிறுதியில் விளையாடும் அணிகளாக இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் சிக்கலின்றி தேர்வுபெறும். அரையிறுதிக்கான மற்றொரு இடத்திற்கு நியூசிலாந்து,வெஸ்ட் இண்டீஸ்,தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளும் போட்டிபோடும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.