உலக இட்லி தினத்தை கொண்டாடிய சசி தரூர்……. கலாய்த்து தள்ளிய நெட்டின்சன்கள்….

 

உலக இட்லி தினத்தை கொண்டாடிய சசி தரூர்……. கலாய்த்து தள்ளிய நெட்டின்சன்கள்….

உலக இட்லி தினத்தை குறிக்கும் வகையில் டிவிட்டரில் இட்லி மற்றும் பல சட்னிகளின் படத்தை வெளியிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரை டிவிட்டர்வாசிகள் கலாய்த்து தள்ளினர்.

நாடே கொரோனா வைரஸால் கதிகலங்கி கிடக்கிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் நேற்று டிவிட்டரில் உலக இட்லி தினத்தை குறிக்கும் வகையில் 3 இட்லி மற்றும் பல விதமான சட்னிகள் டைனிங் டேபிளில் இருக்கும் படத்தை வெளியிட்டார்.

சசி தரூர்

மேலும், என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் இட்லி தினம்தான். ஆனால் இன்று (மார்ச் 30) அதிகாரப்பூர்வமாக உலக இட்லி தினம். என்னை பொறுத்தவரை மனிதன் அல்லது கடவுள் உருவாக்கிய மிகப்பெரிய காலை உணவு என பதிவு  செய்து இருந்தார். தற்போது இதனை டிவிட்டர்வாசிகள் கடுமையாக கிண்டல் மற்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

இட்லி மற்றும் சட்னி வகைகள்

கேரளாவில் குடியேறியவர்கள் உணவுக்காக சிரமப்படுகிறார்கள். ஆனால் இவர் தனது ஆடம்பரத்தை அனுபவித்து வருகிறார். எவ்வளவு வெட்கக்கேடானது என ஒரு டிவிட்டர்வாசி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதேவேளையில் மற்றொருவர், 3 இடலி, 10 சட்னி – உலக சட்னி தினம் என்று சொல்லுங்க சார் என கலாய்த்து இருந்தார். சசி தரூரை டிவிட்டரில் பின்தொடரும் மற்றொரு நபர், சதாரண நபர்களுக்கு சட்னியுடன் இட்லி, சசி தரூருக்கு இட்லியுடன் சட்னி என 3 இட்லிக்கு 10 சட்னி வைத்து இருப்பதை கிண்டல் செய்து இருந்தார்