உலகிலேயே மிக குறைவாக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று

 

உலகிலேயே மிக குறைவாக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று

உலகிலேயே மிக குறைவாக கொரோனா சோதனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரியவந்துள்ளது.

டெல்லி: உலகிலேயே மிக குறைவாக கொரோனா சோதனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 59 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 10 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

corona

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதில் 68 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், உலகிலேயே மிக குறைவாக கொரோனா சோதனை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரியவந்துள்ளது. ஏப்ரல் 3-ஆம் தேதி வரை 69,245 கொரோனா பரிசோதனைகளை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 10000 மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. இது அமெரிக்கா நாட்டுடன் ஒப்பிடுகையில் முப்பதில் ஒரு பங்கு ஆகும்.