உலகின் முதல் பத்து பணக்காரர்கள் யார் தெரியுமா?

 

உலகின் முதல் பத்து பணக்காரர்கள் யார் தெரியுமா?

முறைப்படி உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு பில்லியனில் தரப்படுகிறது.ஜெலுசில் பார்ட்டிகள் இப்படியே முதல் பாராவோடு ஓடிவிடுங்கள்.ஒரு பில்லியன் என்பது இந்திய பணத்தில் 7012 கோடி.

உலகளவில் கணக்கிடும்போது, நம்ம கோடிகள் எல்லாம் வேலைக்கு ஆகாது.ஒரு கோடி ரூபாய் என்பது அமெரிக்க டாலரில் வெறும் ஒன்றரை லட்சம் டாலர்தான். அதனால் அவர்கள் முறைப்படி உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு பில்லியனில் தரப்படுகிறது.ஜெலுசில் பார்ட்டிகள் இப்படியே முதல் பாராவோடு ஓடிவிடுங்கள்.ஒரு பில்லியன் டாலர் என்பது இந்திய பணத்தில் 7012 கோடி.ஒரு மில்லியனுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் உலகளவில் 2153 பேர் இருக்கிறார்கள்.அதில் முதல் பத்துப்பேர் யார் தெரியுமா?

1 ஜெஃப் போசோஸ்

Jeff Bezos

குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 131 பில்லியன்.1994-ல் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவர் வீட்டு கார்ஷெட்டில் வைத்து துவங்கிய கம்பெனிதான், ஆமெசான்! இந்த 131 பில்லியனை சாவகாசமாக 7000-த்தால் பெருக்கி கொள்ளுங்கள்.அத்தனை லட்சம் கோடிகள் அவர் சொத்தின் மதிப்பு.மனித குல வரலாற்றிலேயே பெரிய செல்வந்தர் இவர்தான் என்கிறார்கள்.ஆமெசான் தவிர ‘ புளூ ஆர்ஜின்’ என்கிற ஏரோ ஸ்பேஸ் நிறுவனம்,வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் போன்றவையும் இவருடையவைதான்.

2) பில் கேட்ஸ்

bill gates

96.5 பில்லியன் டாலர்.நம்ம பில்கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டாவும் நடத்தும் பில்- மெலிண்டா ஃபவுண்டேஷன்தான் உலகின் மாபெரும் கொடை நிறுவனம்.இவரும் இவரது நண்பர் பால் ஆலனும் சேர்ந்து 1975-ல் உருவாக்கிய மைக்ரோ சாஃப்ட்தான் பில்கேட்சை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இதுவரை 35.8 பில்லியன் டாலர்களை ஏழை நாட்டு மக்களின் சுகாதாரப் பணிகளுக்காக ஒதுக்கி இருக்கிறார்.குத்து மதிப்பாக இந்திய மதிப்பில் 25 லட்சத்து 20 ஆயிரம் கோடி!

3) வாரன் பஃபெட்

warren buffets

82.5 பில்லியன் டாலர்கள்.நாம் பார்த்த முதல் இருவரும் பிறக்கும் முன்பே உலகின் டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டில் இடம்பெற்ற மனிதர் இவர். இவருடைய தந்தை ஒரு அரசியல்வாதி.தன்னுடைய 11-ம் வயதில் பங்குச்சந்தையில் நுழைந்த வாரன் பஃபெட் தனது 13-ம் வயதிலேயே வருமானவரி தாக்கல் செய்தவர்.

இவர் பில்கேட்சின் நண்பரும்கூட.பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷனுக்கு 3.4 பில்லியன் நன்கொடை வழங்கியிருக்கிறார்.அதாவது 21 ஆயிரம்கோடி ரூபாய்.தற்போது 88 வயதாகும் வாரன் பஃபெட் தனக்குப்பிறகு தனது நிறுவனங்களை நிர்வகிக்க அஜித் ஜெயின் என்கிற 63 வயது இந்தியரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்.ஒடிசாவை சேர்ந்த அஜித் ஜெயின் விரைவில் பதவியேற்க இருக்கிறார்.

4) பெர்னார்ட் அர்நால்ட் மற்றும் ஃபேமிலி.

bernard arnault

சொத்து மதிப்பு 76 பில்லியன்.இவரது துறை லைஃப் ஸ்டைல்.இவருடைய தந்தை சிறிய அளவில் கட்டுமாண துறையில் ஈடுபட்டு இருந்தவர்.1985-ல் கிறிஸ்ட்டியன் டயர் கம்பெனியை 15 மில்லியன் டாலருக்கு வாங்கி களத்தில் குதித்த பெர்நார்டின் LVMH நிறுவனம்,உலகெங்கும் உள்ள ஆயத்த ஆடை முதல் வாசனை திரவியங்கள் வரை நூற்றுக்கணக்கான பிராண்டுகளை கைவசம் வைத்திருக்கிறது.இந்த நிறுவனம் சமீபத்தில் தீவிபத்தில் பாரிசில் எரிந்துபோன நாட்டர்டாம் தேவாலயதின் மறு சீரமைப்புக்கு 220 மில்லியன் டாலர் நிதி கொடுக்க முன்வந்திருக்கிறது.

5) கார்லோஸ் ஸ்லிம் ஹெலு & ஃபேமிலி

Carlos Slim Helu

சொத்து மதிப்பு 64 பில்லியன் டாலர் சொத்து வைத்திருக்கிறார்.அமெரிகன் என்கிற லத்தீன் அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க்கின் உரிமையாளர் கார்லோஸ்.இது தவிர,டெல்மேக்ஸ் என்கிற மெக்சிக்கன் நிறுவனம்,கட்டுமான துறை,ரியல் எஸ்டேட் என்று பல்வேறு துறைகளில் டாலர்களை வாரிக்குவிக்கும் கார்லோஸ் நியூயார்க் டைம்சின் ஷேர்களில் 17% வாங்கி இருக்கிறார்.

6) அமான்சியா ஒர்டேகா.

Amancio Ortega

சொத்து மதிப்பு 62.7 பில்லியன் டாலர்.ஐரோப்பாவின் பணக்காரகளில் ஒருவர். உலகின் மிகப்பெரிய சில்லரை வியாபாரி.இவரது பிராண்டுகளை விற்க உலகெங்கும் 7,500 ஷோரூம்கள் இருக்கின்றன.ஒரு வருடத்தில் டிவிடெண்ட்கள் மூலம் மட்டும் 400 மில்லியன் டாலர் பணம் பார்க்கிறார்.பார்சிலோனா, மாட்ரிட் லண்டன்,சிக்காகோ, நியூயார்க் உலகின் அழகான கடற்கரையான மியாமி இங்கெல்லாம் ஓர்டேகாவின் ரியல்எஸ்டேட் வியாபாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டு இருக்கிறது.

7) லாரி எல்லிசன்

Larry Ellison

சொத்துமதிப்பு 62.5 பில்லியன் டாலர்கள்.1977-ல் ஆரக்கிள் என்கிற மென்பொருள் நிறுவனத்தை துவக்கியதுதான் எல்லிசனின் ஆரம்பம்.

2014-ல் ஆரக்கிள் நிறுவன சி.இ.ஒ பதவியை விட்டு விலகி,அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் ,சேர்மனாகவும் நீடிக்கிறார்.கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான நெட்ஸ்யூட்டை 2016-ல் 9.3 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிக்கு 200 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்திருக்கிறார்.இவர், மின்சார கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டெல்சாவின் 3 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கி இருக்கிறார்.

8)மார்க் ஜுகெர்பர்க்

Mark Zuckerberg

சொத்து மதிப்பு 62 பில்லியன் டாலர்கள்.வாடிக்கையாளர்களின்  ரகசிங்களை விற்றுவிட்டார் என்கிற குற்றச்சாட்டுகள் ஒன்றும் அவர் வளர்ச்சியை தடுத்துவிட முடியவில்லை! மார்க் 2004-ம் ஆண்டு தனது 19 வயதில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவராயிருந்த போது ஃபேஸ்புக்குக்கு துவக்கம் குறித்தார். 2012-ல் அதை பொது பயண்பாட்டுக்கு கொண்டுவந்த காலத்தில் ஃபேஸ்புக்கின் 15% ஷேர் மட்டுமே  அவரிடமிருந்தது.இன்றைய நிலவரம் 62 பில்லியன்!

9) மைக்கேல் புளூம்பெர்க்

Michael Bloomberg

சொத்து மதிப்பு 55.5 பில்லியன் டாலர்கள்.1996-ல் அமெரிக்க ஷேர்                       மார்க்கெட்டின் தலைமை இடமான வால்ஸ்ட்ரீட்டில் சாலமன் பிரதர்ஸ் வங்கியில் கீழ் நிலை அதிகாரியாக நுழைந்து பதினைந்து வருடம் கழித்து தூக்கி எரியப்பட்டார்.ஆனால் ஷேர்மார்கெட் செய்திகளுக்காக அவர் தொடங்கிய செய்தி மற்றும் மீட்டியா கம்பெனி அவரை உச்சத்துக்கு கொண்டுவந்து சேர்த்தது.

இன்று அவரது வருமானம் ஆண்டுக்கு 9 பில்லியன்.பெரும் கொடையாளரான புளூம்பெர்க் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கும்,சுற்று சூழல் பாதுகாபுக்கும் 5 பில்லியன் டாலர்கள் நிதி கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி வரும் 2020 தேர்தலில் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை தோற்கடிக்க 500 மில்லியன் டாலர் செலவிடப் போவதாக அதிவித்திருக்கிறார்.

10)லாரி பேஜ்

larry page

சொத்து மதிப்பு 50.8 பில்லியன் டாலர்கள்.கூகுள் நிறுவனத்தின் தாயான ஆல்ஃபபெட்டின் சிம்மாசனத்தில் இருக்கிறார்.1998-ல் தன்னுடன் படித்த செர்ஜி பிரினுடன் சேர்ந்து கூகுள் என்கிற பகாசுர கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருபத்தொரு ஆண்டுகளில் உலகின் பத்தாவது பெரும் செல்வந்தராக ஆலியிருக்கிறார் லாதி பேஜ்.

மேலும் சில உதிரி(! ) பணக்காரர்கள்.

mukesh ambani

இந்த லிஸ்ட்டில் அமெரிக்காவின் சார்லஸ் கோச்,அவரது சகோதரர் டேவிட் கோச்சைத் தொடர்ந்து 13 வது இடத்தில் 50 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 13-ம் இடத்தில் இருக்கிறார் இந்தியாவின் முகேஷ் அம்பானி.

இங்கிலாந்தின் நம்பர் ஒன் பணக்காரர்கள் இந்தியர்கள்தாம்.ஸ்ரீசந்த் ஹிந்துஜா,கோபிசந்த் ஹிந்துஜா சகோதரர்கள்  22 பில்லியன் பவுண்ட் சொத்துக்கள் வைத்திருக்கிறார்களாம்.கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர்!