உலகின் மிகப்பெரிய திரையரங்கில் ‘2.0’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு!

 

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் ‘2.0’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு!

உலகின் மிகப்பெரிய பெருமை மிக்க திரையரங்கான ‘லெ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் ரஜினியின் ‘2.0’ திரைப்படத்தின் காட்சிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

பாரிஸ்: உலகின் மிகப்பெரிய பெருமை மிக்க திரையரங்கான ‘லெ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் ரஜினியின் ‘2.0’ திரைப்படத்தின் காட்சிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஃபிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள லெ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கம், உலகளவில் மிகப்பெரிய திரையரங்கமாக கருதப்படுகிறது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களை மட்டுமே திரையிட்டு வரும் கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டன. தற்போது உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.400 கோடி வசூலித்த மெகா பிளாக் பஸ்டர் படமான ‘2.0’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படத்திர்கு 20 காட்சிகள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் ஒரு படத்தின் ஒரு காட்சி திரையிடுவதே அரிதான விஷயம் என்ற பட்சத்தில் வரும் டிச.8ம் தேதி வரை காட்சிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கிராண்ட் ரெக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.