உலகின் நீண்ட நடைபாதை எது..? கூகுள் வழிகாட்டுகிறது..! நடக்கத் தயாரா நீங்கள்!?

உலகின் நீண்ட நடைபாதை எது..? கூகுள் வழிகாட்டுகிறது..! நடக்கத் தயாரா நீங்கள்!?

படகு,விமானம் எதுவும் வேண்டாம்,கால்களால் நடந்தே மனிதன் எவ்வளவு தூரம் போக முடியும்  இந்த பூமியில் என்று கூகுள் ஒரு பாதையை காட்டுகிறது.தென் ஆப்ரிக்காவில் இருக்கும் கேப்டவுனில் ( அகுல்ஹாஸ் முனை ) ஷூக்களை மாட்டிக்கொண்டு கிளம்பினால் ரஷ்யாவில் இருக்கும் மாகடான் வரை நீங்கள் போய்கொண்டே இருக்கலாம்.

capetown

வழியில் எதிர்ப்படும் ஆறுகள்,ஏரிகளைக் கடப்பதற்கு பாலங்கள் இருக்கின்றன. மொத்தம் 22,387 கிலோமீட்டர் ( 13,910 மைல் ). இந்த பாதையில் ஒரு ஆரோக்கியமான மனிதன் இடைவிடாமல் , ஒரே சீரான வேகத்தில்,இரவும் பகலும் நடந்தால் 4492 மணி நேரத்தில் இந்தப்பாதையை கடக்கலாம்.அதாவது 187 நாட்களில்.அல்லது ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் நடை,அப்புறம் ஓய்வு என்று நடந்தால் 562 நாட்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. 

magadan

இந்தப் பயணத்தில் 117,693 மீட்டர் ஏற்றமான பாதைகளும், 117 , 686 மீட்டர் சரிவுப் பாதைகளும் கடக்கப்பட வேண்டும்.எவரஸ்ட் சிகரத்தில் 13 தடவை ஏறி, இறங்கியதற்கு சமம்.வழியில் பல்வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.சகாராவின் வெப்பமும்,ரஷ்யாவின் குளிரும் மிகக் கடுமையானவை.

இவற்றை விட ஆபத்தானது வழியில் கடக்க வேண்டிய 16 நாடுகளில் முக்கியமான மூன்றான தெற்கு சூடான்,சிரியா,ஜார்ஜியா ஆகியவை.தொடர்ந்து உள்நாட்டுப் போரால் சிதிலமாகிக் கிடக்கும் இந்த நாடுகள் வழியே நடந்து போவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.