உலகின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் – சொன்னது யார் தெரியுமா?

 

உலகின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் – சொன்னது யார் தெரியுமா?

லண்டன்: உலகின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் தான் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போதைக்கு மிகச் சிறப்பாக  பந்துவீசி வரும் வீரர்களில் இந்தியாவின் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆகியோர் முன்னணியில் உள்ளனர் . இவர்கள் இருவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். அதிலும் அஸ்வின் தான் சிறந்தவர் என முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘உலசின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் என்பதை எளிதாக கூறிவிடலாம். ஆசியக் கண்டத்தில் அஸ்வின் சாதனைகள் அபாரமானது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் அவரது பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக பந்து வீசிய போதிலும், இங்கிலாந்து மண்ணில் அவர் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த முடியவில்லை. எனவே அவரை விட அஸ்வின் சிறந்தவர். ஏனெனில் அஸ்வின் மாறுபட்ட (variations) முறையில் பந்துகளை வீசுகிறார். மேலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.