உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங்: உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் மருத்துவர்களுக்கும், நர்ஸ்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் பெரும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளின் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் சோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியான பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால் அங்கு அனைத்து மக்களும் வெளியில் வரும்போது முகமூடி அணிந்தே வருகின்றனர். கூடுமானவரை வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கின்றனர்.