உலகப் புகழ் பெற்ற பப்ஜி வீடியோ கேம் பிளே ஸ்டேஷனில் வெளியானது

 

உலகப் புகழ் பெற்ற பப்ஜி வீடியோ கேம் பிளே ஸ்டேஷனில் வெளியானது

உலகப் புகழ் பெற்ற பப்ஜி வீடியோ கேம் பிளே ஸ்டேஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை: உலகப் புகழ் பெற்ற பப்ஜி வீடியோ கேம் பிளே ஸ்டேஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் தற்போது ஸ்மார்ட்போன்களில் கோடிக்கணக்கானோர் மிகவும் சுவாரஸ்யமாக விளையாடும் வீடியோ கேம் பப்ஜி (PUBG) ஆகும். அதிக பிரபலமான கேமாக இருக்கும் பப்ஜி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்மார்ட்போன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலில் மட்டும் பப்ஜி வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த கேம் பிளே ஸ்டேஷனிற்கும் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு இருக்கும் பப்ஜி ஒவ்வொன்றும் தனித்தனி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பிரத்யேக அணிகளை பொருத்த வரை பப்ஜி பி.எஸ்.4 பப்ஜி பி.எஸ்.4 பிக்சல் ஆர்ட் பாராசூட் உடன் வழங்கப்படுகிறது. இந்த பிளே ஸ்டேஷனில் விளையாட பயனர்கள் தங்களது கேமில் லாக்-இன் (Login) செய்தாலே போதும். பிளே ஸ்டேஷனுக்கென இருக்கும் நீல நிற பாராசூட் கிடைக்கும்.

இதனுடன் நாதன் டிரேக் டெசர்ட், அன்சார்ட்டெட் உள்ளிட்டவை பி.எஸ். 4 கேமில் இருக்கும். மேலும் எலைட் பேக்பேக்கில் இருந்து தி லாஸ்ட் ஆஃப் யு, பப்ஜி அவதார், பப்ஜி மிராமர் போன்ற தீம்கள் பிளே ஸ்டேஷனுக்கு என பிரத்யேக அணிகளாக இருக்கின்றன.

பப்ஜி பி.எஸ்.4: டிஸ்க் எடிஷன், பப்ஜி லூட்டர்ஸ் எடிஷன், பப்ஜி சர்வைவர்ஸ் எடிஷன் மற்றும் பப்ஜி சேம்பியன்ஸ் எடிஷன் என 4 வெர்ஷன்களில் கிடைக்கிறது. டிஸ்க் எடிஷன் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பப்ஜி லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் பேஸ் கேமிற்கான கட்டணம் மட்டுமே. பப்ஜி சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.2,750 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை அடங்கும்.

பப்ஜி சேம்பியன்ஸ் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பேஸ் கேம், விகென்டி இவென்ட் பாஸ், 6,000 ஜி காயின் பேக் மற்றும் 20,000 பி.பி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.