உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவிற்கு செக் வைத்த இங்கிலாந்து

உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவிற்கு செக் வைத்த இங்கிலாந்து

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், ராய், ரூட், மார்கன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், ராய், ரூட், மார்கன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்தது.

ஐசிசி உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் தனது விக்கெட்டை இம்ரான் தாஹீரிடம் பறிக்கொடுத்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜோசன் ராய் மற்றும் ஜோ ரூட் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதத்தை கடந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் 57 ரன்னுடம், ராய் 53 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களுடனும் ஆட்டமிழந்து. 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு 312 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.