உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காவியடிக்கும் பாஜக… அதகளத்தை ஆரம்பித்த மோடி..?!

 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காவியடிக்கும் பாஜக… அதகளத்தை ஆரம்பித்த மோடி..?!

இந்த காவி உடைக்கு வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் சிலர் இது மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட செயல். இந்துத்துவ கொள்கைகளைக்கொண்ட பாஜக அரசு திட்டமிட்டு காவியை திணிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே இந்தியாவை காவி மயமாக்கி விட்ட பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பதால் அதிரடியாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஆடைகளையும் காவி மயமாக்க முடிவு செய்துள்ளதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. modi

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ள  நிலையில் நேற்று முன் தினம் முதல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.  அதன்படி இரு அணிகள் விளையாடும்போது ஒரே நிறத்திலான ஆடையுடன் விளையாடக்கூடாது. உதாரணமாக இங்கிலாந்து , இந்தியா , இலங்கை , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆடைகள் ஊதா நிறத்தில் இருக்கும். பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஆடைகள் பச்சை நிறத்தில் இருக்கும் அதனால் அனைத்து அணிகளும் தங்களுக்கென ஒரு மாற்று உடையை தேர்வுசெய்துகொள்ள வேண்டும்.modi

இந்தக்  காரணங்களால் இந்திய அணி தனது மாற்று உடையை காவி நிறத்தில் மாற்றி உள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தியா இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிடம் விளையாடும் போட்டிகளில் காவி நிறத்திலான உடையுடன் விளையாடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.oppo

இந்த காவி உடைக்கு வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் சிலர் இது மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட செயல்.  இந்துத்துவ கொள்கைகளைக்கொண்ட பாஜக அரசு திட்டமிட்டு காவியை திணிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும், இந்தியா முழுவதும் இந்திய காவி அடைக்கு ஆதரவு பெருகியுள்ளது. ஆனால், இந்திய அணிக்கு உடைகளை ஸ்பான்ஸர் செய்யும் ஓப்போ மொமைல் நிருவனத்தின் லோகோ கலர் இந்த காவி. அதனால் தான் ஸ்பான்ஸர் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் நிறத்தை தனது லோகோ கலரான காவி நிறத்திற்கு மாற்றுகிறது அந்த நிறுவனம். ஆகையால் மோடி இந்த விஷயத்தில் மஸ்தான் வேலை செய்யவில்லை என்பதே உண்மை.