உறைந்து போயிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி: இயற்கையின் அழகைப் பாருங்கள்

 

உறைந்து போயிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி: இயற்கையின் அழகைப் பாருங்கள்

கடும் குளிர் காரணமாக அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

நியூயார்க்: கடும் குளிர் காரணமாக அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

அமெரிக்காவில் பல இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், வீடுகள், கார் மற்றும் வாகனங்களில் பனி போர்வை போல படர்ந்துள்ளது. அங்குள்ள ஏரிகள் கூட உறைந்து காணப்படுகின்றன.

அந்த வகையில், உலகின் மிகப்பெரிய மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போயுள்ளது. ஆர்ப்பரித்து கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி, இப்படி உறைந்து போய் இருக்கும் நிலையிலும் தன் இயற்கை எழில் கொஞ்சும் அழகு நிறைந்து காணப்படுகிறது. 

அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஐஸ்கட்டியாய் மாறிப்போன நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர்.