உறுதியும் இல்லை நம்பிக்கையும் இல்லை… மோடியின் உரையை விமர்சித்த காங்கிரஸ்

 

உறுதியும் இல்லை நம்பிக்கையும் இல்லை… மோடியின் உரையை விமர்சித்த காங்கிரஸ்

ஜம்மு அண்டு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் உறுதி மற்றும் நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா விமர்சனம் செய்தார்.

சிறப்பு சட்டப்பிரிவு 370, 35 ஏ நீக்கம் மற்றும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் முன்னேற்றத்துக்கு தடை கல்லாக இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் இனி அங்கு வளர்ச்சி ஏற்படும். காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். மக்கள் தங்களது உறுப்பினர்களை வெளிப்படையாக மற்றும் நேர்மையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெறுவார்கள். இந்திய மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் இனி காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் என்பது பல்வேறு வாக்குறுதிகளை பிரதமர் மோடி அளித்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் உரையை பா.ஜ. கட்சி வரவேற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி வழக்கம் போல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பிரதமர் மோடியின் உரை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது: அமித் ஷா என்ன சொன்னாரோ அதைத்தான் பிரதமர் மோடி நேற்று மறுபடியும் பேசினார். அது காஷ்மீர் மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் இல்லை. ஜம்மு அண்டு காஷ்மீர் மக்களுக்கு அவர்களுடைய அடிப்படை உரிமை உறுதியாக கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கையும் இல்லை.

காஷ்மீர்

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. மாநிலத்தை பிரித்தல் மற்றும் தகுதியை குறைத்தற்கு இந்திய வரலாற்றில் இதற்கு முன் முன்னுதாரணம் இல்லை. அந்த பகுதி முழுவதும் தடை உள்ளது. அதனை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.