உரிமம் இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும்.. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்டிரைக் அறிவிப்பு !

 

உரிமம் இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும்.. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  ஸ்டிரைக் அறிவிப்பு !

​​​​​​​தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப் படாத பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப் படாத பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

ttn

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடிநீர் உரிமம் பெறாத 132 சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், அந்த 132 நிலையங்களை  மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ttn

இருப்பினும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மார்ச் 3 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் அப்படிச் செய்யவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆஜராகும் படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி, கடலூர் அருகே 13 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் ,  குன்றத்தூரில்  4 குடிநீர்  சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்தும், மீண்டும் குடிநீர் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.