உயிரிழந்த நாயின் வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்!

 

உயிரிழந்த நாயின் வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்!

நேற்று முன் தினம் வேலூர் மக்கான் சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயன்ற நாய், எதிரே வந்த வாகனத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்துள்ளது.

இப்போதெல்லாம் பெருகி வரும் வாகனங்களால் பல கால்நடைகளும், நாய்களும் உயிரிழக்கின்றன.  நேற்று முன் தினம் வேலூர் மக்கான் சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயன்ற நாய், எதிரே வந்த வாகனத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்துள்ளது. இதில் அந்த நாய் வயிற்றில் குட்டிகளை சுமந்து கொண்டிருந்துள்ளது. இதனைக் கண்ட  தண்டபாணி என்பவர் அந்த நாயை உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலே அந்த நாய் உயிருடன் தான் இருந்துள்ளது. 

ttn

ஆனால், மருத்துவமனைக்கு சென்ற உடன் அந்த நாய் உயிரிழந்துள்ளது. மருத்துவமனையில் அந்த நாயைப் பரிசோதித்த மருத்துவர், அது உயிர் பிழைக்காது என்று தெரிந்து கொண்டதால் அதன் வயிற்றில் இருந்த குட்டிகளை உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

tttn

அப்போது, அதன் வயிற்றில் இருந்து 5 குட்டிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து அந்த குட்டிகளுக்குப் பால் பாட்டில் மூலம், மருத்துவர் பால் கொடுத்துள்ளார். இப்போது அந்த 5 குட்டிகளும் நலமாக இருக்கின்றன. 

ttn

இது குறித்துப் பேசிய மருத்துவர், “அந்த நாய் உயிரிழந்து ஒரு நிமிடம் ஆகிவிட்டால் உள்ளே இருக்கும் குட்டிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து விடும். அடிபட்ட நாய்  உயிர் பிழைக்காது என்று எண்ணித் தான் உடனடியாக குட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.