உயர்த்தப்பட்ட சொத்து வரி உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தான் திரும்பப்பெறப்பட்டுள்ளது : மு.க ஸ்டாலின்

 

உயர்த்தப்பட்ட சொத்து வரி உள்ளாட்சித் தேர்தலுக்காகத் தான் திரும்பப்பெறப்பட்டுள்ளது : மு.க ஸ்டாலின்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை மக்கள் செலுத்தினால் போதும் என்றும் அதிகமாக விதிக்கப்பட்ட சொத்து வரிகள் வரும் ஆண்டுகளில் ஈடுகட்டப்படும்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி நேற்று “உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வைக் குறைப்பது குறித்து குழுவின் பரிசீலனை முடியும் வரை மக்கள் பழைய சொத்து வரிகளைச் செலுத்தலாம்.

minister

அதாவது, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முந்தைய சொத்து வரியை மக்கள் செலுத்தினால் போதும் என்றும் அதிகமாக விதிக்கப்பட்ட சொத்து வரிகள் வரும் ஆண்டுகளில் ஈடுகட்டப்படும். சொத்து வரி குறைப்பிற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்தார். 

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு  தான் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளது என்று அரசியல் கட்சிகளிடையே பரபரப்பான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

stalin

இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களும் திமுகவினரும் அவ்வளவு போராட்டம் நடத்தியும் குறைக்கப்படாத சொத்து வரி உயர்வு, உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தான் குறைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் மேயர், ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த முடிவு செய்யவில்லை என்று உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.