உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு: உ.பி. அரசு அமல்படுத்தியது

 

உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு: உ.பி. அரசு அமல்படுத்தியது

பொருளாதாரத்தின் பின் தங்கி இருக்கும் பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. 

லக்னோ: பொருளாதாரத்தின் பின் தங்கி இருக்கும் பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. 

இந்தியா முழுவதும் பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என மத்திய பாஜக அரசு முடிவெடுத்து, அதனைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றவும் செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குச் சமூகநீதி சார்ந்து இயங்கும் கட்சிகளான திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குஜராத், ஜார்க்கண்ட்டை தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் மூன்றாவது மாநிலமாக உத்திரப்பிரதேசம் உருவாகியுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

மேலும், கடந்த 14ஆம் தேதி முதல் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளதாகவும், இதனால் இதர இட ஒதுக்கீடுகளுக்கு எந்த வித பாதிப்பும் நேராது என்றும் உ.பி அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.