‘உன்னை ஆசிட் ஊற்றி எரித்துக் கொன்று விடுவேன் என்று காதலர் மிரட்டுகிறார்’ : பிரபல நடிகையின் பரபரப்பு வீடியோ!

 

‘உன்னை ஆசிட் ஊற்றி எரித்துக் கொன்று விடுவேன் என்று காதலர் மிரட்டுகிறார்’ : பிரபல நடிகையின்  பரபரப்பு வீடியோ!

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

தமிழில் பேரன்பு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அஞ்சலி அமீர். திருநங்கையான இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு  மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

ttn

இந்நிலையில் நடிகை அஞ்சலி அமீர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘என்னுடைய காதலர் என்னை கொடுமை செய்து வந்தார்.அதனால் அவருடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்து அவரிடம் இருந்து  விலகினேன். ஆனால்  அவரோ என்னை விடாமல் துரத்துகிறார். என்னுடன் நீ வாழவில்லை என்றால் உன்னை ஆசிட் ஊற்றி எரித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்’ என்றார். 

தொடர்ந்து அந்த வீடியோவில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் வரை என்னுடைய பணத்தை பறித்துக் கொண்டார்.

ttn

என்னால் அவரின்  சித்ரவதைகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்று கண்ணீர்  மல்க கூறியுள்ளார்.   இந்த வீடியோ திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.