உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்.எல்.ஏ குல்தீப் சிங்கிற்கு ஆயுள் தண்டனை !

 

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்.எல்.ஏ குல்தீப் சிங்கிற்கு ஆயுள் தண்டனை !

உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்.எல்.ஏ குல்தீப் சிங் மீது வழக்குத் தொடரப்பட்டது.

உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எம்.எல்.ஏ குல்தீப் சிங் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவர் பா.ஜ.க கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையில்,  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இருப்பினும், அந்த பெண் தொடர்ந்து போராடி வந்தார். 

ttn

சில நாட்களுக்கு முன்னர் குல்தீப் சிங் செங்கார், இந்த வழக்கில் குற்றவாளி என்று டெல்லி தீஸ் ஹஜாரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்குத் தண்டனை குறித்த விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குல்தீப் சிங்குக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.