உத்திராடம் நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்

 

உத்திராடம் நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்

உத்திராடம் நட்சத்திரகாரர்களின் இயல்பான குணாதிசயங்களை பற்றியும் வழிபாட்டு கோயில்கள் பற்றியும் பார்போம்.

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தோறாவது இடத்தை பெறுவது உத்திராட நட்சத்திரமாகும்.

uthradam

இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரகாரர்கள் அழகு வாய்ந்தவர்களாகவும் நல்லபுத்திசாலியாகவும் ஈகைத்தன்மை உடையவர்களாகவும் சகலவிதமான சாஸ்திரங்களையும்  அறிந்தவர்களாகவும் திகழ்வார்கள்.

இந்த நட்காத்திரகாரர்கள் பல கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள். உழைத்து சொத்து சேர்க்கவேண்டும் என்று விரும்புவார்கள். 

uthraadam

வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பார்கள். உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். மற்றவர்கள் உங்களிடம் வீண் விவாதத்துக்கு வந்தால் கொஞ்சம் கூட சளைக்காமல் அவர்களுக்குப் பதிலடி தருவார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூத்த சகோதரிகள் மீது பாசமுள்ளவர்கள் இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் மகர ராசியிலும் அமைந்துள்ளது. 

uthraadam

சமூக நலன் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் . இந்த நட்ச்த்திரகாரர்கள் விழிப்புஉணர்வு இயக்கங்களையும் சங்கங்களையும் தலைமை தாங்கி நடத்துவார்கள்.

வயோதிக வயதிலும் இளமையான சிந்தனை இவர்களுக்கு இருக்கும்.அவலங்களைத் தட்டிக் கேட்கும் சீர்திருத்தவாதிகளாக விளங்குவார்கள். எந்தத் துறையில் பணியாற்றினாலும் முதலிடம் பிடிப்பார்கள். 

uthradam

உத்திராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நகர்புறங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அல்லது அவர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு அருகில் வீடு கட்டி குடி ஏறும் பாக்கிய சாலியாக இருப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்களாகவும் பிறர் மனை நோக்காதவர் களாகவும் இருப்பார்கள்.  

தன்னுடைய தவறுகளை சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள் ஒரே நேரத்தில் பலவிதமாக யோசிப்பதால் மதில் மேல் பூனை போல மனம் அலை பாயும்.

மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி,போன்ற துறைகளில் சாதிப்பார்கள். பூமியை ஆதாரமாக கொண்ட தொழில், நாடகத்துறை, நடிப்பு, திரைப்பட தயாரிப்பு போன்றவற்றில் பிரகாசிப்பார்கள்.

ruby

உத்திராட நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள பலாமரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் கிடைக்கும்.

இந்த நட்சத்திரகாரர்கள் அதிக தனம்பிக்கை மிக்கவர்களாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை தலைமை தாங்கும் அளவிற்கு நற்பண்புகளை பெற்று இருப்பார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம் : சூரியன், முருகன், சிவன் 

வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் :

திருவண்ணாமலை,திருக்கொள்ளிகாடு,திருக்கோஷ்டியூர்,சூரியனார் கோயில்.