உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் பலி

 

உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துகுள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துகுள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூரில் இருந்து அலகாபாத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில், ஹர்சந்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 50 மீட்டர் தூலவி சென்ற நிலையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ மற்றும் வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயலின் உத்தரவின் பேரில் ரயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோஹனி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.