உதித் சூர்யாவிற்கு வெங்கடேசன் தான் வில்லன்: மதுரை நீதிமன்றம் விமர்சனம்..!

 

உதித் சூர்யாவிற்கு வெங்கடேசன் தான் வில்லன்: மதுரை  நீதிமன்றம் விமர்சனம்..!

கடந்த மாதம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததால் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததால் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின் படி வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களையும் அவர்களது தந்தைகளையும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததால் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து, உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி நீதித்துறை முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். 

Udit surya

இன்று உதித் சூர்யாவின் வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில், நீட் தேர்வில் கைதான உதித் சூர்யாவிற்கு அவரது தந்தை வெங்கடேஷ் தான் வில்லன் என்று மதுரை நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளார்.

Udit surya father

அதனையடுத்து, உதித் சூர்யாவைக் கைது செய்து 15 நாட்கள் ஆகியும் இன்னும் ஏன் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்று சிபிசிஐடி காவல்துறையினருக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உதித் சூர்யாவின் தந்தையின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.