உதயமானது ஜி ஹிந்துஸ்தான் செய்தி தொலைக்காட்சி! இதுல என்ன ஸ்பெஷல்?

உதயமானது ஜி ஹிந்துஸ்தான் செய்தி தொலைக்காட்சி! இதுல என்ன ஸ்பெஷல்?

இந்தியாவின் முன்னனி பொழுது போக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தனது நிறுவனத்தில் இருந்து புதிய செய்திகள் தொலைக் காட்சியினை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜி ஹிந்துஸ்தான் ஹிந்தி மொழி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் முதல் முறையாக தென்னிந்திய மொழிகளில் ஹிந்தி செய்திகள் தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்திய செய்திகளை வழங்கும் முதல் தொலைக்காட்சி என்ற பெருமையினை ஜி ஹிந்துஸ்தான் பெற்றுள்ளது.முதல் முறையாக ஜி ஹிந்துஸ்தான் தொலைக்காட்சி ஜி உத்திரபிரதேசம் மாநில தொலைக்காட்சியாக ஜி மீடியா தனது நிறுவனம் தொடங்கியது.பின்பு சில வருடங்கள் கழித்து புதுப் பொலிவுடன் இந்திய பிராந்திய செய்திகளை தொகுத்து வழங்கும் தொலைக் காட்சியாக ஜி ஹிந்துஸ்தான் என்ற பெயாில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது.ஜி ஹிந்துஸ்தான் தொலைக்காட்சி இன்சாட்4எ செயற்கைகோளில் இலவச தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறது.ஜி மீடியா நிறுவனத்தின் செய்திகள் தொலைக்காட்சியின் நேயா்களை மாநில வாாியாக  அதிகாிக்கும் முன் நடவடிக்கையாக இப்புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.

விரைவில் மற்ற மாநில மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.ஜி ஹிந்துஸ்தான் தொலைக்காட்சியின் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளை காண கேபிள் டிவியில் வழங்கப்பட்டுள்ள செட் டாப் பாக்ஸ்யில் ஆடியோ தமிழ் மொழியினை தோ்வு செய்து காணலாம்.ஜி ஹிந்துஸ்தான் தமிழ் தொலைக்காட்சியினை காண கேபிள் டிவி அல்லது கட்டண டிடிஎச் நிறுவனங்களில் மாதந்திர கட்டண தொலைக்காட்சி தொகுப்பில் கேட்டு தொலைக்காட்சியினை காணலாம்