உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? – பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு அளித்த கமல்!!

 

உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? – பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவு அளித்த கமல்!!

அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக கூறி, கோவையிலிருந்து செயல்படும் டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர், செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பல மணி நேரத்திற்கு பிறகு செய்தியாளர், ஒளிப்பதிவாளரை விடுவித்த காவல்துறையினர், டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர் சாம் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

இந்நிலையில் கமல்ஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்கு உணவு வழங்காததை கண்டித்து மருத்துவ ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை செய்தியாக வெளியிட்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.