உண்மையை ஒப்புக்கொண்ட தேசவிரோத குற்றச்சாட்டில் கைதான ஷர்ஜீல் இமாம்…..

 

உண்மையை ஒப்புக்கொண்ட தேசவிரோத குற்றச்சாட்டில் கைதான ஷர்ஜீல் இமாம்…..

இந்தியாவிலிருந்து அசாமை பிரிப்போம் என பேசியதை தேச விரோத குற்றச்சாட்டில் கைதான ஷர்ஜீல் இமாம் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜே.என்.யு. ஆராய்ச்சி மாணவரான ஷர்ஜீல் இமாம் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு வருபவர். மேலும் டெல்லி ஷாகீன் பாக் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் இவர்தான். ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் இந்தியாவை அசாமிலிருந்து பிரிப்போம் என்ற தேசிய ஒருமைபாட்டுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசி இருந்தார்.

ஷர்ஜீல் இமாம்

இதனையடுத்து இவர் மீது காவல்துறைக்கு புகார் சென்றது. இதன் தொடர்ச்சியாக ஷர்ஜீல் இமாமை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனை தெரிந்து கொண்ட அவர் தலைமறைவானார். இருப்பினும் பீகாரில் ஜெகனாபாத்தில் அவர் இருப்பதை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். பின் அவரை தேசவிரோத குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர்.

ஷர்ஜீல் இமாம்

டெல்லி குற்றப்பிரிவு போலீசார் ஷர்ஜீல் இமாமிடம் விசாரணை நடத்திய போது, அசாம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த வீடியோக்கள் உண்மைதான் என்றும் போலியானது இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். அந்த வீடியோக்கள் தற்போது பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஷர்ஜீல் இமாம் யாரிடம் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவரது சமூக வலைதள கணக்குகள் மற்றும் போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.