உணவு பொருட்கள் மற்றும் காய்கறி விலை குறைவாம்…. அதனால மொத்த விலை பணவீக்கம் குறைஞ்சு போச்சாம்

 

உணவு பொருட்கள் மற்றும் காய்கறி விலை குறைவாம்…. அதனால மொத்த விலை பணவீக்கம் குறைஞ்சு போச்சாம்

கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.26 சதவீதமாக குறைந்தது. உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை குறைந்ததே இதற்கு காரணம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

[16:32, 3/16/2020] Gps: மொத்த விலை பணவீக்கம் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் மற்றும் 2020 ஜனவரியில் மொத்த விலை பணவீக்கம் கிடுகிடுவென ஏற்றம் கண்டது. 2019 நவம்பரில் 0.60 சதவீதமாக இருந்த பணவீக்கம் அதற்கு அடுத்த மாதமான டிசம்பரில் 2.59 சதவீதமாக உயர்ந்தது. 2020 ஜனவரியில் மொத்த விலை பணவீக்கம் 3.1 சதவீதமாக உயர்ந்தது.

வெங்காயம், உருளை கிழங்கு

இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் 2.23 சதவீதமாக குறைந்துள்ளது. 2019 பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதமாக உயர்ந்து இருந்தது. கடந்த மாதத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் உருளைகிழங்கு போன்ற காய்கறிகளின் விலை குறைவாக இருந்ததும் பணவீக்கம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம்.

இந்திய ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் போது சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும். கடந்த பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் 6.58 சதவீதமாக குறைந்தது. பணவீக்கம் குறைந்துள்ளபோதிலும், அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு இலக்கான 4 சதவீதத்தை காட்டிலும் அதிகமாகும். அதனால் ரிசர்வ் வங்கி அடுத்து வரும் தனது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை குறைக்குமா என்பது சந்தேகம்தான். இருப்பினும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடனுக்கான வட்டியை குறைக்கவும் வாய்ப்புள்ளது.