‘உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துகிறார்கள்’ : ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் பரபரப்பு புகார்!

 

‘உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துகிறார்கள்’ : ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் பரபரப்பு புகார்!

விசாரணைக்காக அவர் நேற்று  வேலூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னிறுத்தப்பட்டார்.

உணவு கூட கொடுக்காமல் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

murugan

 ராஜீவ்  காந்தி திட்டமிட்டு கொல்லப்பட்ட வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக முருகனும் அவரது மனைவி நளினி உள்பட  ஏழு பேர் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனின்  அறையில் செல்போன், சிம்கார்டுஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று  வேலூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னிறுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

murugan

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த முருகன், ‘சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமை செய்கிறார்கள். நான் முதல்வருக்கு எழுதிய கடிதத்தை கூட அனுப்பாமல் 4 நாட்கள் சிறை நிர்வாகமே வைத்திருந்தது. இப்போது செல்போன், சிம்கார்டு இருந்ததாகக் கூறி  வீண் பழியைச் சுமத்துகிறார்கள். விடுதலையும் செய்யாமல், ஆன்மீகவாதியாகவும் வாழ விடாமல் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என்றார்.