உடையில் தாராளம்..! விட்ட வாய்ப்பை பிடிக்க திட்டம் போட்ட நடிகை!

 

உடையில் தாராளம்..! விட்ட வாய்ப்பை பிடிக்க திட்டம் போட்ட நடிகை!

கோலிவுட்டில் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த பந்தா நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக எதற்கும் துணிந்துவிட்டாராம்.

சென்னை: கோலிவுட்டில் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த பந்தா நடிகை, தற்போது பட வாய்ப்புக்காக எதற்கும் துணிந்துவிட்டாராம்.

அறிமுகமானபோது பப்ளியாக இருந்த நடிகை பிரபல நடிகையின் சாயலில் இருப்பதால் அவருடைய யங் வெர்ஷன் என்று கூறப்பட்டார். இதை விரும்பாத பிரபல நடிகையோ அப்படியெல்லாம் இல்லை என்று பேட்டிகளில் கூறி சமாளித்தார்.

மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது பந்தாக்காட்டிய பப்ளி நடிகை, அவரது உடல் வாகிற்கு ஏற்ற உடைகளையே அணிந்து நடித்தார். காதல் மன்னனான முன்னணி நடிகரை காதலித்து கழட்டிவிட்ட பப்ளி நடிகைக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்து ஆளே காணாமல் போனார்.

சற்றும் எதிர்ப்பாராதவாறு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி, ரசிகர்களை முகம் சுழிக்கச் செய்த நடிகை, விட்ட வாய்ப்பை பிடிக்க பெரிய நடிகர், சின்ன நடிகர் என யாருடன் வேண்டுமானாலும் நடிக்க தயார் என்றார். அத்துடன், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே அரையும் குறையுமாக ஆடையில் தாராளம் காட்டினார்.

திரைப்பட வாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக பப்ளி நடிகை கையில் எடுத்துள்ளார். பப்ளி நடிகையின் உடலி எடையை குறைத்ததும் அவரது வாய்ப்புகள் வராமல் போனதாக கூறப்படுகிறது. எனினும், பப்ளி நடிகையின் கவர்ச்சிக் கணக்கு கைக்கொடுக்குமா? இரண்டாவது இன்னிங்க்ஸில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.