உடல் எடையை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைப்பது எப்படி? ஸ்லிம் ரகசியம் இது தான்!

 

உடல் எடையை பக்கவிளைவுகள் இல்லாமல் குறைப்பது எப்படி? ஸ்லிம் ரகசியம் இது தான்!

உடல் எடையைப் பற்றி கவலைப்படுவதில் இரண்டே விஷயங்களில் தாங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். உங்களுடைய அதிகளவிலான உடல் எடை மரப்பணு ரீதியிலானதா இல்லை உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்புகளினாலா என்பதை மட்டும் செக் பண்ணிக்கோங்க… அது தான் ரொம்ப முக்கியம்.
அளவுக்கு அதிகமா உடல் எடை இருப்பதைத் தான் உடற்பருமன் என்கிறோம்

உடல் எடையைப் பற்றி கவலைப்படுவதில் இரண்டே விஷயங்களில் தாங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். உங்களுடைய அதிகளவிலான உடல் எடை மரப்பணு ரீதியிலானதா இல்லை உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்புகளினாலா என்பதை மட்டும் செக் பண்ணிக்கோங்க… அது தான் ரொம்ப முக்கியம்.
அளவுக்கு அதிகமா உடல் எடை இருப்பதைத் தான் உடற்பருமன் என்கிறோம். 

weight

உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்களாக கருதப்படுவது மரபு ரீதியிலானது, அதிக அளவில் உணவுகளை உட்கொள்வது, 
உடல் உழைப்பு இன்மை, கவலை, தூக்கமின்மை, அமர்ந்த படியே இயங்கும் வாழ்க்கை முறை, 
நாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள், மது, புகைப்பழக்கம், அதிகமான அளவுகளில் மருந்துகளை உட்கொள்வது, தாமதமான குழந்தைப்பேறு, உணவு மாற்றங்கள் போன்றவற்றை சொல்லலாம்.

அளவுக்கு அதிகமான எடை ஏற்பட்டால் நமது உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக 
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பகப் புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், உறக்கச் சுவாசத்தடை, மலட்டுத் தன்மை போன்றவைகள் ஏற்பட வழிவகுக்கிறது.

weight loss

இவை தவிர சில வகையான உணவுகள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அந்த மாதிரியான உணவுகளை தவிர்த்து விடலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர்-பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அளிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதே சமயம் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடையை குறைக்க உதவும்.
நன்றாக கைகளை வீசி விறுவிறுப்பாக நடப்பது, நீச்சல், லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல் போன்ற சிறு சிறு முயற்சிகள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கும்.  உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொண்டு வருவதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். மருந்துகளை நம்பாமல் ஆரோக்கியமான உணவையே மருந்தாக நினைத்து உட்கொள்ளுங்கள்.