உடல்நிலை சரியில்லையா மருத்துவர் வேண்டாம்… மெடிக்கல் ஏடிஎம் போதும்!! 

உடல்நிலை சரியில்லையா மருத்துவர் வேண்டாம்… மெடிக்கல் ஏடிஎம் போதும்!! 

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இனி மருத்துவமனைக்கோ, மருத்துவர்களை நாடியோ செல்லவேண்டாம்… இது டிஜிட்டல் யுகம்… இங்கு வந்துவிட்டது மெடிக்கல் ஏடிஎம்

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இனி மருத்துவமனைக்கோ, மருத்துவர்களை நாடியோ செல்லவேண்டாம்… இது டிஜிட்டல் யுகம்… இங்கு வந்துவிட்டது மெடிக்கல் ஏடிஎம்

மனித உடலில் ஏற்படுத்தும் நோய்களுக்கு சுமார் 58 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்காக மருத்துவ ஏ.ஹெச்.எம் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுத்துக்கொள்வது போல இந்த 58 வகையான நோய்கள் வந்தால் இந்த ஏடிஎம் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இதனை சான்ஸ்கிர்டெக் ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கி நேற்று அறிமுகம் செய்துள்ளது. 

ATM

இந்த மருத்துவ ஏடிஎம் மூலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, டெங்கு, ஹீமோகுளோபின், டைபாய்டு, ஹெச். ஐ.வி, மலேசியா, சிக்கன்குனியா, சிறுநீர் பரிசோதனைகள், காது மற்றும் தோல் பரிசோதனை உள்ளிட்ட 58 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். தற்போது இந்த மருத்துவ ஏடிஎம் இந்தூர், புவனேஸ்வர், குர்ஷான் ஆகிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. விரைவில் தமிழகத்திலும் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.