உடல்தானத்தின் மூலம் 6 பேர் உயிரை காப்பாற்றிய குழந்தை; சென்னை மருத்துவமனையின் புதிய சாதனை?!..

 

உடல்தானத்தின் மூலம் 6 பேர் உயிரை காப்பாற்றிய குழந்தை; சென்னை மருத்துவமனையின் புதிய சாதனை?!..

மூளைச்சாவு அடைந்த மும்பை குழந்தையின் பெற்றோர் உடல்தானம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

சென்னை: போர்டிஸ் மலர் மருத்துவமனை செய்த இதய மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் 2 வயது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது குழந்தை உயிருக்கு போராடி வந்துள்ளது. மும்பையை சேர்ந்த 2 வயது குழந்தையின் இதயம் கிடைத்ததால், இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் இந்த குழந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கின்றனர் போர்டிஸ் மலர் மருத்துவமனை மருத்துவர்கள்.

chennai

மூளைச்சாவு அடைந்த மும்பை குழந்தையின் பெற்றோர் உடல்தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் 6 பேர் உயிரை காக்க முடிந்ததாக கூறப்படுகிறது, அதில் 4 பேர் குழந்தைகள். அந்த குழந்தையின் இதயம் கிடைத்ததை அறிந்த மலர் மருத்துவமனை நிர்வாகம், விமானத்தின் மூலம் இதயத்தை வரவழைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். 

இதய அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர். பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர். சுரேஷ் ராவ் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்.

இதுகுறித்து டாக்டர். பாலகிருஷ்ணன், இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை மிகக் கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்தது. அதற்கு காரணம் சிகிச்சை பெறுவது 2 வயது குழந்தை. அதனால் மிகவும் நுணுக்கமாக இந்த சிகிச்சையை செய்ய வேண்டியிருந்தது. குழந்தைகளுக்கான இதயமாற்று அறுவை சிகிச்சையில் இது ஓர் மைல்கல் என தெரிவித்தார்.