உடலை சீர்படுத்தும் சீரகம்

 

உடலை சீர்படுத்தும் சீரகம்

அபார்ட்மெண்ட்ல வசிச்சாலும், எல்லார் வீட்டு அடுப்படியிலும் அஞ்சறை பெட்டி இருக்கும்.நோய் நாடி…நோய் முதல் நாடின்னு சொல்வோமில்லையா, அதுமாதிரி நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் குவிந்து கிடக்குது உடல் ஆரோக்கியத்துக்கான சூட்சுமம். 

அபார்ட்மெண்ட்ல வசிச்சாலும், எல்லார் வீட்டு அடுப்படியிலும் அஞ்சறை பெட்டி இருக்கும்.நோய் நாடி…நோய் முதல் நாடின்னு சொல்வோமில்லையா, அதுமாதிரி நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் குவிந்து கிடக்குது உடல் ஆரோக்கியத்துக்கான சூட்சுமம். 

அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற எல்லாப் பொருள்களுமே ஏதோவொரு விதத்துல நம்மளோட ஆரோக்கியத்தின் மேல அக்கறையா இருக்கும். நாம தான் சாப்பாட்டுல இருக்கிற கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல அஞ்சறைப் பெட்டியோட மகத்துவம் தெரியாம,பொங்கல் சாப்பிடும் போது அதிலிருக்கிற மிளகை எல்லாம் ஓரங்கட்டுவது, கடுகு போட்டு தாளிச்சா முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டு சாப்பிடுவதுன்னு பந்தா பண்றோம்.
டாப் தமிழ் நியூஸ் வாசகர்கள் இனி தினந்தோறும் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களிலிருந்து மருத்துவப் பயன்பாடுகளைப் பார்க்கலாம். 

siragam

இன்னைக்கு சீரகத்தோட சிறப்புகளைப் பார்ப்போம் – அஞ்சறைப் பெட்டியின் நறுமணப் பொருட்களிலும், வீட்டு மருத்துவப் பொருட்களிலும் சீரகத்துக்கு சிறப்பான இடமிருக்கு. அதனால் தான் நம் பாட்டிகளில் ஆரம்பித்து அம்மாக்களில் இருந்து மனைவி வரை எல்லோரும் சமையலில் சீரகத்தை மறக்காமல் சேர்த்து வருகிறார்கள். உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியையும் சருமத்திற்கு பளபளப்பையும் தருகிற ஆற்றல் சீரகத்திற்கு உண்டு. எனவே தினமும் நம் அன்றாட உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீராக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவிதமான அஜீரணக் கோளாறுகளும் நம் வயிற்றை எட்டிப் பார்க்காது.மழைக் காலங்களில் தண்ணீர் மூலமாக பரவும் நோய்களும் நம் வீட்டை எட்டிப் பார்க்காது. இந்த சீரக நீருக்கும் பசியைத் தூண்டி ருசியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.

siragam

தீராத தலைச்சுற்றலா… கொஞ்சம் சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால் வாயுத்தொல்லைகளில் இருந்து உடனடியாக விடுபடலாம். 
சீரகத்தை தேயிலைத்தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் நாட்பட்ட சீதபேதி உடனடியாக குணமாகும். நோஞ்சான்களாக இருக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் வாழைப் பழத்துடன் சிறிது சீரகம் சேர்த்து சாப்பிடக் கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரித்து சுறுசுறுப்பாக மாறுவார்கள். 

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து ஒரு நாள் ஊறவைத்து கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கிற பித்தம் குணமாகும். பித்தம் அதிகரிப்பதினால் வருகிற நோய்களிலிருந்து விடுபடலாம்.