உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: மு.க.ஸ்டாலின் பாராட்டு

 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: மு.க.ஸ்டாலின் பாராட்டு

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை: சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என அதிரடி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பலரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

இந்நிலையில், தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல் என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.