உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரையால்தான் நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பர்….. தெளிவுப்படுத்திய மத்திய அமைச்சர்

 

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரையால்தான் நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பர்….. தெளிவுப்படுத்திய மத்திய அமைச்சர்

உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை நீதிபதி முரளிதர் விசாரித்தார். அப்போது, பா.ஜ.க.வின் கபில் மிஸ்ரா, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் அபய் வர்மா மீது எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்றும், களநிலவரம் குறித்து 12 மணி நேரத்துக்குள் அறிக்கை தர வேண்டும். கலவரத்தை தடுக்க செய்த ஏற்பாடுகள் குறித்து  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதிபதி முரளிதர்

ஆனால் அன்று இரவு நீதிபதி முரளிதர் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். மேலும் அவர் விசாரித்த டெல்லி கலவர வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி முரளிதர் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் பா.ஜ.க. தலைவர்களை காப்பாற்ற அரசு நீதிபதியை இடமாற்றம் செய்ததாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியது. இதற்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்

ரவிசங்கர் பிரசாத் இது தொடர்பாக டிவிட்டரில், உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் கடந்த 12ம் தேதி பரிந்துரை செய்ததையடுத்து நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டார். நீதிபதி பணியிட மாற்றம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதல் பெறப்படுகிறது. நன்கு தீர்வு காணப்பட்ட செயல்முறை பின்பற்றப்பட்டுள்ளது என பதிவு செய்துள்ளார்.