உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: என்ன சொல்கிறார் ரஞ்சன் கோகாய்?

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: என்ன சொல்கிறார் ரஞ்சன் கோகாய்?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுடெல்லி:  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஞ்சன் கோகாய் மீது பாலியல்  புகார்

sc

 

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அந்த பெண், கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவரது வீட்டில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று கூறியுள்ளார்.

22 நீதிபதிகளுக்கு  கடிதம்

judgement

மேலும்  இந்த  விவகாரம் நடந்த சில வாரங்களிலேயே ஒருநாள் விடுமுறை எடுத்ததை காரணம் காட்டி, என்னை பணியிலிருந்து விடுவித்து விட்டனர். நான் மட்டுமல்லாமல், போலீஸ் கான்ஸ்டபிள் பணியில் இருக்கும் என் கணவர் மற்றும் மைத்துனரும் கூட  சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த விவகாரம் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன்

ranjan

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்,  ‘ என்னிடம் இருந்து பணம் பிடுங்க நினைத்து முடியாததால் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களாக நேர்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரைக் கருதுகிறேன். சுதந்திரமாக பணியாற்றுவதால் பலியாடு ஆக்கப்பட்டிருக்கிறேன். இன்னும் சில வாரங்களில், முக்கிய வழக்குகளை விசாரிக்கவுள்ளேன். அதனால் தடுக்க சிலர் முயன்றுள்ளனர். எனக்கு எதிரான பாலியல் புகார்களை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள். நான் விசாரிக்க மாட்டேன். நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை’ என்று விளக்கமளித்துள்ளார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலம் கடந்த ஆண்டு  அக்டோபர் 2ம் தேதி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: தந்தைக்காக தன் உயிரை பணயம் வைத்த இளம்பெண்: கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!