உச்சநீதிமன்ற கிளையைச் சென்னையில் நிறுவ வேண்டும் :மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் !

 

உச்சநீதிமன்ற கிளையைச் சென்னையில் நிறுவ வேண்டும் :மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல் !

உயர்நீதி மன்றங்களில் அளிக்கும் தீர்ப்பு சரியாக இல்லை என்றால் மக்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.

உச்சநீதிமன்ற கிளையைச் சென்னையில் நிறுவ வேண்டும் என்று இன்று நடந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் கூறினார். அதில் பேசிய வைகோ, ” உயர்நீதி மன்றங்களில் அளிக்கும் தீர்ப்பு சரியாக இல்லை என்றால் மக்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம். ஆனால், தென்னிந்திய மக்களால் மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், டெல்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, வழக்கறிஞர்கள் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் உச்சநீதிமன்றத்தை நாட முடியவில்லை. 

vaiko

உச்சநீதிமன்றத்தில் தொடரப்படும் மேல் முறையீடு வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் தென்னிந்தியாவில் இருந்தே வருகின்றன. இதனால் தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளையை நிறுவினால் மட்டுமே ஏழை, எளிய மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21ன் படி, அனைவருக்கும் பொது நீதி கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமைகளுள் ஒன்று என்று இருக்கிறது. 2018 மே 4 ஆம் நாள் கணக்கின்படி, தற்போது உச்ச நீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சனையை எவ்வாறு தீர்க்க முடியும்?

ttn

அரசியல் சட்டத்தின் 130 ஆவது பிரிவின் படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யாரையும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டியதில்லை. அவர் தாமாகவே முடிவெடுக்கலாம். ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதனால், சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை நிறுவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.