உச்சத்தில் வெங்காயத்தின் விலை: பதுக்கினால் நடவடிக்கை பாயும்; தமிழக அரசு எச்சரிக்கை !

 

உச்சத்தில் வெங்காயத்தின் விலை: பதுக்கினால் நடவடிக்கை பாயும்; தமிழக அரசு எச்சரிக்கை !

சாமானிய மக்கள் வெங்காயத்தின் விலையை கண்டு அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை : வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்தால் அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தொடர் மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதன் விளைவாக வெங்காயத்தின் விலை சரசரவென உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் வெங்காயத்தின் விலையை கண்டு அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் நோக்கோடு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .

ttn

அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் அடிப்படையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து நேற்று தலைமைசெயலகத்தில்  ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் 10 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான வெங்காயத்தை வைத்துள்ள சில்லரை வியாபாரிகளையும்,  50 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான வெங்காயத்தை வைத்து உள்ள மொத்த வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  முடிவு செய்யப்பட்டுள்ளது அதேபோல் வெங்காயத்தை அதிகவிலைக்கு விற்கும் வியாபாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

onion

முன்னதாக வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு மகாராஷ்டிரா  மாநிலத்தில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.  அதன்படி தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது