உங்க ரேஷன் கார்டை மாத்திட்டீங்களா?.. இன்றோடு முடிகிறது கால அவகாசம் !

 

உங்க ரேஷன் கார்டை மாத்திட்டீங்களா?.. இன்றோடு முடிகிறது கால அவகாசம் !

சர்க்கரை ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது அட்டைகளை அரசி ரேஷன் அட்டைகளாக மாற்றித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்து வந்தனர்.

சர்க்கரை ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களது அட்டைகளை அரசி ரேஷன் அட்டைகளாக மாற்றித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்து வந்தனர். அதனால், சர்க்கரை கார்டுகள் வைத்திருப்பவர்கள் குடும்ப அட்டையின் நகலை இணைத்து 19.11.2019  முதல் 26.11.2019 ஆம் தேதி வரை  www.tnpds.gov.in  என்ற இணையதளத்தில் மாற்ற விண்ணப்பிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை வெளியிட்டார். 

ttn

ரேஷன் கார்டுகளை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் தேவைப்பட்டதால், தமிழக அரசு ரேஷன் கார்டுகளை மாற்றக் கால அவகாசத்தை நீட்டிக்க ஒப்புதல் அளித்தது. அதன் படி, 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தமிழக அரசு அளித்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதற்கு மேல் ரேஷன் கார்டுகளை மாற்றக் கால அவகாசம் வழங்கப்படாது என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.