“உங்க காலைத் தொட்டு கும்புடுறேன்” : பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிடும் டிராபிக் போலீஸ்!

 

“உங்க காலைத் தொட்டு கும்புடுறேன்” : பொதுமக்களிடம் கையெடுத்து கும்பிடும் டிராபிக் போலீஸ்!

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நோய் தொற்று உள்ளவர்களும், வெளிநாடு பயணத்தில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.  

ttn

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் ஊரடங்கு உத்தரவு போது வெளியே வந்த பொதுமக்களிடம்   போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கையெடுத்து கும்பிட்டு,  ‘சீரியஸ்னஸ்சை புரிஞ்சுக்கோங்க… உங்க காலை தொட்டு கும்பிட்டு கேட்கிறேன். தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்க’ என்று கேட்கிறார்.  மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று கூறுவது அவரவர் நலனுக்காக தான். ஆனால் அதை பொருட்படுத்தாமல், எங்களுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் வராது என்று தான்தோன்றி தனமாக சுற்றி திரியும் சிலர் இந்த வீடியோவை பார்த்த பிறகாவது சமூக நலனில் அக்கறையோடு இருப்பார்கள் என்று நம்பலாம்.  காரணம்  நமக்காக உழைக்கும் காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருமே மனிதர்கள் தான். நாம் சமூக விலகலை கடைபிடித்தாலே பாதி பிரச்சனை குறையும்.