உங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா? அப்ப இத பண்ணுங்க.!

 

உங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா? அப்ப இத பண்ணுங்க.!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே மிகப் பெரிய பிரச்சனை இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது தான்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே மிகப் பெரிய பிரச்சனை இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பது தான். நீங்கள் ஏர்டெல், ஜியோ அல்லது வேறு எந்த நெட்வொர்க் வாடிக்கையாளராக இருந்தாலும் இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருந்து இருக்க முடியாது.

உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகப்படுத்தலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். பேக்ரௌண்ட் டேட்டா ஆஃப்

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முதலில் நாம் செய்ய வேண்டியது பேக்ரௌண்ட் இல் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆப்ஸ்களை தேர்ந்தெடுத்து நிறுத்துவது தான். ஆனால் அணைத்து நேரங்களிலும் இந்தச் செயல்முறை உங்களுக்குக் கைக்கொடுக்காது என்பது தான் சற்று சங்கடம். ஒவ்வொரு ஆப்பாக தேர்வு செய்து அதன் பயன்பாட்டை நிறுத்துவதும் சற்று சிரமம் தான்.
 
இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க:

internet

இந்தச் சிரமத்தில் இருந்து தப்பித்து, உங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கக் கூகுள் பிளே ஸ்டோரில் நிறைய ஆப்கள் உள்ளது. இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்தித் தரும் நம்பிக்கையான இரண்டு ஆப்களை இங்கு உங்களுக்காக வழங்கியுள்ளோம். இந்தச் செயலிகளை பயன்படுத்தி எளிதில் உங்களின் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

டேட்டாலி ஆப்:

internet

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டேட்டாலி செயலி, உங்களின் இன்டர்நெட் வேகத்தை எளிதில் அதிகரித்துத் தருகிறது. பேக்ரௌண்ட் இல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆப்ஸ்களின் இன்டர்நெட் சேவையை தடுத்து உங்களின் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்துத் தருகிறது.

கூடுதல் சேவை:

internet

இந்தச் செயலியில் கூடுதலாகப் பல சேவைகளையும் கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது. பெட்டைம் மோடு, டெய்லி லிமிட், எமெர்ஜென்சி பேங்க், புப்ப்ளே தட போன்ற அட்டகாசமான சேவையையும் இந்தச் செயலியில் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.
 
இன்டர்நெட் கார்டு ஆப்:

ஷேய்க்சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தச் செயலி, உங்களின் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்துத் தருகிறது. உங்கள் மொபைல் போன் இல் உள்ள அணைத்து ஆப்ஸ்களின் விபரங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி இந்த ஆப் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. தேவை இல்லாத செயலிகள் பேக்ரௌண்ட் இல் இன்டர்நெட் பயன்படுத்துவதை ஒரு சிங்கிள் கிளிக் இல் செய்து முடித்துவிடுகிறது.

கூடுதல் சேவை:

internet

இத்துடன் இந்த இன்டர்நெட் கார்டு ஆப் கூடுதல் சேவையாக ஆபாச வலைத்தளங்களை உங்களின் மொபைல் போனில் தடுப்பதற்கான சேவையுடன் டார்க் தீம் போன்ற பல சேவைகளை வழங்குகிறது.

இந்த இரண்டு செயலிகளை பயன்படுத்தி, உங்கள் இன்டர்நெட் வேகத்தை மிக எளிதாக அதிகரித்துக் கொள்ளலாம்