உங்கள் வீட்டுக்கு அருகிலேயே குறைந்த விலையில் வெங்காயம் வாங்கணுமா.. அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

 

உங்கள் வீட்டுக்கு அருகிலேயே குறைந்த விலையில் வெங்காயம் வாங்கணுமா.. அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

கூட்டுறவு அங்கன்வாடிகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.33 ரூபாய்க்கு விற்கப் படப் போவதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் வெங்காய விலை உயர்ந்து கொண்டே வருகிறது. உற்பத்தி பாதிப்பு மற்றும் இறக்குமதி குறைவின் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் சுமார் 80 ரூபாய்க்கு மேல் விற்கப் பட்டது. 

Onion

அதனால் தமிழக அரசு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு குறைந்த விலையில் விற்கப் போவதாகவும்,அதன் படி, தமிழகத்தில் வெங்காயத்தின் விலை 3 நாட்களில் குறையும் என்றும் தெரிவித்தது. 

Minister sellur raju

இதனை, செயல் படுத்தும் விதமாக ஆந்திராவில் இருந்து இறக்குமதியான வெங்காயங்கள், கூட்டுறவு அங்கன்வாடிகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.33 ரூபாய்க்கு விற்கப் படப் போவதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.