உங்கள் சர்க்கரையின் அளவைக் கண்ட்ரோல்ல வைக்கணுமா… ‘பிங்க் டீ’ குடிங்க..! 

 

உங்கள் சர்க்கரையின் அளவைக் கண்ட்ரோல்ல வைக்கணுமா… ‘பிங்க் டீ’ குடிங்க..! 

பிளாக் டீ ,க்ரீன் டீ , ஒயிட் டீ ,ஐஸ் டீ எல்லாம் குடிச்சிருப்பீங்க  சிலர் கேள்விப்பட்டிருப்பீங்க… ‘பிங்க்’ பத்தி தெரியுமா..!? ‘பிங்க் டீ’ என்றும் ஆப்பிள் டீ என்றும் அழைக்கப்படும் இது ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை கொண்டு செய்யப்படும் டீ. இந்த டீ பற்றி  பெரும்பாலான ஆட்களுக்கு தெரியாது. 

பிளாக் டீ ,க்ரீன் டீ , ஒயிட் டீ ,ஐஸ் டீ எல்லாம் குடிச்சிருப்பீங்க  சிலர் கேள்விப்பட்டிருப்பீங்க… ‘பிங்க்’ பத்தி தெரியுமா..!? ‘பிங்க் டீ’ என்றும் ஆப்பிள் டீ என்றும் அழைக்கப்படும் இது ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை கொண்டு செய்யப்படும் டீ. இந்த டீ பற்றி  பெரும்பாலான ஆட்களுக்கு தெரியாது. 

pink

இதில் உள்ள நன்மைகளைப் பட்டியல் போட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவது நிச்சயம். சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது அப்படிப்பட்டவர்களுக்கு இதுபோன்ற பிங்க் டீ செய்து கொடுப்பது வழக்கம்.ஏராளமான நன்மைகள் இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் குடிக்கக்கூடாது.

1.எதிர்ப்பு சக்தியையும் உடல் எடை குறைப்பும் செய்யவல்லது :

பிங்க் டீயில் இருக்கும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது குளிக்காலத்தில் உடலில் சூடு அதிகரிக்கவைத்து வெதுவெதுப்பாக வைக்க உதவுகிறது

immiun

.சீரான உடல் என்றால் நோய்களிலிருந்தும், நோய் தொற்றுகளிலிருந்தும் எதிர்ப்புசக்தி கொண்டதாயும் இருக்க வேண்டும். இதில் சேர்க்கப்படும் லெமன் ஜூஸ்,இலவங்கப்பட்டை,தேன் ஆகியவை உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டவை.

2.கலோரி அளவு :

apple

ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மையை தரும். ஒரு முழு ஆப்பிளின் 100 கி கலோரி இருக்கும்.இந்த டீயில்  50 கலோரிகள் இருக்கும். இதனால் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுவது உடலுக்கு நன்மையை தரும்.

3.செரிமானத்திற்கும்,உடல் சுத்தத்திற்கும் ஏற்றது:

பிங்க் டீயை தினமும் காலையில் குடித்துவர இது உங்கள் மலசிக்கல் பிரச்னையை சீராக்கிவிடும், மேலும் இதனால் உங்கள் உடல் உள்ளும் புறமும் சுத்தமாக இருக்கும்.

4.இதயம் மற்றும் எலும்புகளுக்கு நல்லது:

தினமும் பிங்க் டீயை குடித்துவர உங்களை இதய பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.

bone

மேலும்,பிங்க் டீயில் சேர்க்கப்படும் பொருட்கள் மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம்,விட்டமின்ஸ் ஆகியவைகளால் நிரம்பி இருப்பதால் இவையனைத்தும் உங்கள் எலும்புகளை வலுவுள்ளதாக்கும்.

5.சர்க்கரை அளவை சீராக்கவல்லது:

sugar

மேலும் இந்த பிங்க் டீ ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.இந்த இயற்கை பானத்தில் உள்ள ஃப்ருக்டோஸ் எனப்படும் இயற்கை சர்க்கரை ஆன்டி ஆக்சிடண்டாக செயல்பட்டு ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக்குகிறது.

பிங்க் டீயை எப்படி செய்வதென்று பார்ப்போம்:

தேவையான பொருட்கள்:

1.ஆப்பிள் – 1 தோல் சீவப்படாதது 

apple

2.இலவங்கப்பட்டை/தூள் – தேவையான அளவு 
3.லெமன் – அரை பழம் ஜூஸ் 

lemon

4.க்ரீன் டீ பாக் – 2
5.தேன் – 1 டீஸ் ஸ்பூன் 

செய்முறை:

முதலில் வானிலையில் 2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதித்ததும் அதில் நங்கு கழுவிய தோல் சீவப்படாத ஆப்பிள் துண்டுகளை சேர்த்து கொதிக்கவிடவும்.

apple tea

இப்போது அதனில் இலவங்கப்பட்டை அல்லது இலவங்கப்பட்டை தூளினை சேர்க்கவேண்டும். இப்போது பாத்திரத்தை மூடி  இப்போது 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

tea

பிறகு இந்த கலவையை இறக்கி வடிகட்டி பின் அதில் 2 பாக் க்ரீன் டீ சேர்க்கவும்.அதில்,லெமன் ஜூஸை பிழிந்து தேன் சேர்த்து குடிக்கவும்.

உங்கள் உடலுக்கும் மனதிற்கும் நலம் தரும் பிங்க் டீ ரெடி!