உங்கள் கணவர் பேண்ட்டுக்குள் பாம்பு போனால் கூட காரணம் மோடி தானா? பிரபல நடிகையை விமர்சித்த நெட்டிசன்!

 

உங்கள் கணவர் பேண்ட்டுக்குள் பாம்பு போனால் கூட காரணம் மோடி தானா? பிரபல நடிகையை விமர்சித்த நெட்டிசன்!

ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை:  ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம்  நடந்தது. அதனைத் தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில்  இன்று 3-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. 

kerala

இதனிடையே கேரள மாநிலத்தின்  கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்திலிருந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தில் பாம்பு ஒன்று இருந்தது.இதனால்  வாக்களிக்க வந்தவர்களும், அறையிலிருந்த தேர்தல் அதிகாரிகளும் அலறியடித்து ஓடினர்.  இதையடுத்து அதிகாரிகள் சிலரும், போலீசாரும் வந்து ஒப்புகைச் சீட்டு எந்திரத்திலிருந்த பாம்பை எடுத்தனர். இதைத் தொடர்ந்து பாம்பானது காட்டு பகுதிக்குள் விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து  நடிகை குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில், மோடி ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டார். இந்த கருத்தானது  தற்போது சமூகவலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.  குஷ்பூவின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர கிளப்பியுள்ளது. 

 

இது குறித்து பதிலளித்த நெட்டிசன் ஒருவர்,  உங்கள் கணவர் பேண்ட்டுக்குள் பாம்பு சென்றால் கூட மோடி தான் காரணம்  என்று சொல்வீர்களா? என்றும் வேறு ஒருவர், பொய் சொல்றவன தலைவனா ஏத்துகிட்டா அப்படி தான் என்று மாறி மாறி கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால்  தன்னை விமர்சனம்  செய்பவர்களின் பேச்சுக்களைக் காதில் வாங்கிக்கொள்ளாத குஷ்பூ, என்னை கிண்டல் செய்பவர்களுக்காக என்று கூறி தன்னுடைய  ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுக் கடுப்பேற்றியுள்ளார் . 

இதையும் வாசிக்க: வாக்கு சாவடிக்குள் நுழைந்த விஷப் பாம்பு…வெலவெலத்து ஓடிய பொது மக்கள்: கேரளாவில் பரபரப்பு!