உங்களுடைய அதிர்ஷ்ட நிறமும், திசையும் என்ன?

 

உங்களுடைய அதிர்ஷ்ட நிறமும், திசையும் என்ன?

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்
நாள் (17-07-2019)புதன்கிழமை
ராகுகாலம்
பகல் 12 மணி  முதல் 1.30 மணி வரை
எமகண்டம்
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
நல்லநேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
சந்திராஷ்டமம்
மிருகசீரிடம் இரவு 11.40 வரை பிறகு திருவாதிரை
பரிகாரம்     பால்

மேஷம்

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : ஆசிகள் கிடைக்கும்.
கிருத்திகை : உயர்வு உண்டாகும்.

ரிஷபம்
முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் ஏற்படும். பணியில் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பயணங்களால் பலன்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரோகிணி : எதிர்ப்புகள் நீங்கும்.
மிருகசீரிடம் : புரிதல் உணர்வு உண்டாகும்.  

மிதுனம்
புதிய முயற்சிகளில் இன்று ஈடுபட வேண்டாம். அதனால் பெரிதாக பலன்கள் இருக்காது. உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

கடகம்
சொத்து சேர்க்கை உண்டாகும். நிலபுலன்களில் எதிர்பார்க்காத வருவாய் உண்டு. பிரிந்து சென்ற சொந்தங்கள் அவர்களாகவே வந்து இணைவார்கள். பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறைந்து சுமூகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்.
பூசம் : இன்னல்கள் குறையும்.
ஆயில்யம் : சுபிட்சமான நாள்.

சிம்மம்
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பயணங்களில் சில காலதாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் நிதானமானப் போக்கை கையாளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : மதிப்புகள் உயரும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.

கன்னி
உறவுகளிடம் சில மனக்கசப்புகள் வந்து போகும். வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் இன்று எச்சரிக்கையாக இருங்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும். 

துலாம்
பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் இன்று உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : சேமிப்பு உயரும்.

விருச்சகம்
 உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த  பண உதவிகள் கிடைக்கும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதிய அணுகுமுறையால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.  
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும். 
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

தனுசு
வெளியூர் பயணங்களால் உங்கள் எண்ணம் போல் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க  காலதாமதமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
பூராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்
செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். பொறாமையைத் தவிர்த்து விடுங்கள்.  பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். எண்ணிய செயல்கள் நிறைவேற சற்று கடினமாக முயற்சிக்க வேண்டும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : அமைதி வேண்டும். 
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும். 
அவிட்டம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

கும்பம்
 நண்பர்களுக்கிடையே பேசும்போது நிதானம் வேண்டும். கோபத்தை விட்டொழியுங்கள். பிறரின் பணிகளை குறை சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப விவகாரங்களில் அந்நியர்களின் தலையீட்டை தவிர்க்கவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : அமைதி வேண்டும்.
சதயம் : பேச்சுக்களில் கவனம் தேவை.
பூரட்டாதி : இலாபம் அதிகரிக்கும். 

மீனம்
 குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். செய்யும் தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். பணியில் இருந்து வந்த தடைகள் அகலும். உறவினர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பெரியோர்களிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : திருப்தி உண்டாகும்.
ரேவதி : விவேகம் வேண்டும்.