உங்களுக்கும் ஹார்மோன் பிரச்னை இருக்கா? இத பாருங்க..!

உங்களுக்கும் ஹார்மோன் பிரச்னை இருக்கா? இத பாருங்க..!

ஆரோக்கியமான உணவு முறைகள் தான் உடல்நலட்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. அப்படி புரொட்டீன் சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றான சோயா பீன்ஸ், உடல்நலத்தை எப்படி காக்கிறது என்பதை பார்க்கலாம்

சோயா பீன்ஸில் உள்ள அதிகளவு புரொட்டீன், மிதமான கொழுப்பு, வைட்டமி பி, ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சிறியவர் வரை பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் 9 வகையான அமினோ ஆசிட்களை கொண்டுள்ள ஒரே புரொட்டீனை வழங்கும் ஒரே தாவர உணவு சோயா பீன்ஸ்  ஆகும்.

soya

பாலை தவிர்க்க விரும்புபவர்கள் சோயாவை பயன்படுத்தலாம். சோயாவை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் எடை, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சோயா உதவுகிறது.

ரத்தத்தில் அதிகளவு கொழுப்பு சேருவதனால் இதய பாதிப்புகள் உண்டாகும். ஆனால், சோயாவில் கொழுப்புச்சத்து இல்லாததால் இதை பயன்படுத்தும் போது இதயம் தொடர்பான பிரச்னைகள் பெருமளவில் தடுக்கப்படுகிறது. இதில் உள்ள புரொட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது.

soya

மேலும், சோயா புரொட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால்  ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற தொல்லைகள் நீங்கும்.