உங்களிடமுள்ள விலங்கு பலத்தை பயன்படுத்துங்கள்! துப்பாக்கி வில்லனின் அசரவைக்கும் வீடியோ

 

உங்களிடமுள்ள விலங்கு பலத்தை பயன்படுத்துங்கள்! துப்பாக்கி வில்லனின் அசரவைக்கும் வீடியோ

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படங்களிலும் நடித்து, விஜய் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர் வித்யூத் ஜம்வால். தமிழில் துப்பாக்கி, பில்லா 2 மற்றும் அஞ்சான் ஆகிய தமிழ் படங்களிலும் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால், தனது சண்டைக் காட்சிகளுக்கு டூப்பில்லாமல் தானே நடிக்கும் திறமை கொண்டவர். 2011இல், ஃபோர்ஸ் என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

 

அதில் உங்களிடமுள்ள விலங்கு பலத்தை வெளிக்கொணருங்கள் என, மாட்டுவண்டியில் மாடு தள்ளிக்கொண்டு வரும் அளவிற்கு எடையை வத்து தனது தோளில் சுமந்தபடி ஓடி வருகிறார். பயிற்சிக்காக இப்படி செய்தாரா அல்லது, தனது குவாரண்டைன் காலத்தை இப்படியெல்லாம் செய்து பொழுதுகழிக்கிறாரா என ட்விட்டரில் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர் வடிவழகனாகவும், தற்காப்புக் கலைஞராகவும் உள்ளார். மேலும் களரிப்பயிற்று என்ற கலையையும் கற்றவர் என்பது குறிப்பிடதக்கது.