உக்ரைன் விமானத்தை ஈரான் ராணுவம் வீழ்த்தியதா? அதிர்ச்சித் தகவல்!

உக்ரைன் விமானத்தை ஈரான் ராணுவம் வீழ்த்தியதா? அதிர்ச்சித் தகவல்!

ஈரான் நாட்டு ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இன்று காலை ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தியது ஈரான். இந்த தாக்குதலில் அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் இன்று காலை விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரான் நாட்டு ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இன்று காலை ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்தியது ஈரான். இந்த தாக்குதலில் அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

iran-attack-86875

ஆனால், தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையுடன் இருந்ததால் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாட்டுப் படைகளுக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், பொருட்சேதம் பற்றிய மதிப்பீடு தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஈரானில் இருந்து ஏவுகணைகள் புறப்பட்டுச் செல்லும் வீடியோ மற்றும் அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடந்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில், அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடக்கும்போது மக்கள் அலறும் சத்தம் கேட்கிறது. வீடியோ எடுத்த பகுதியில் உள்ள மக்கள் அலறிய சத்தமா அல்லது ராணுவ நிலைகளில் இருந்து எழுந்த சத்தமா என்று தகவல் இல்லை.

ukraine-airline-crash-01

இந்தநிலையில் இன்று காலை ஈரான் தலைநகரில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. அதிலிருந்த விமான சிப்பந்திகள் உள்ளிட்ட 170 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், ஈரான் ராணுவம் தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்புள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. இதை ஈரான் நாட்டு ஊடகங்களே தெரிவித்துள்ளன. ஆனாலும், உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதனால், ஈரான் வான் எல்லையைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எச்சரக்கைவிடுத்துள்ளன.